[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர் - சீனா அறிமுகம்

world-s-first-ai-news-anchor-unveiled-in-china

உலகின் முதல் ஏஐ செய்தி வாசிப்பாளரை சீனா அறிமுகம் செய்து, தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவில் மிகப் பிரபலமான செய்தி நிறுவனம் ஜிங்குவா (Xinhua). இந்த நிறுவனம் மனிதர்களுக்கு பதிலாக செய்தி வாசிக்கும் Virtual செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்துள்ளது. இந்தச்  செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர் (Artificial news readers) முதன்முதலாக தனது செய்தி வாசிப்பை ஆங்கிலத்தில் தொடங்கி உள்ளார். அப்படியே அச்சு அசலாக அந்தச் செய்தி வாசிப்பாளர் மனிதரை போலவே தென்படுகிறார். அவரது உதட்டசைவு, உடல்மொழி என சகலத்திலும் மனித வாடை அப்படியே உள்ளது. இந்தச் செயற்கை செய்திவாசிப்பாளருக்கு Qiu Hao எனப் பெயர் வைத்துள்ளனர்.

Xinhua செய்தி நிறுவனம் சீனாவின் முதன்மை தேடுப்பொறி நிறுவனமான Sogou உடன் இணைந்து Qiu Haoவை தயாரித்துள்ளது. “எல்லோருக்கும் வணக்கம். நான் ஆங்கில செயற்கை செய்திவாசிப்பாளர். இது என் முதல் நாள் செய்தி வாசிப்பு. என்னுடைய குரல், எனது தோற்றம், Xinhuaவின் நிஜ செய்திவாசிப்பாளர் போலவே இருக்கும். செய்திதுறையில் பலவிதமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்த முன்னேற்றத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்” என்று செய்தி படிக்கிறார் செயற்கை செய்திவாசிப்பாளர்.

சீனாவில் மட்டும் உலக அளவில் முன்னனி மென்பொருள் நிறுவனங்கள் பல உள்ளன. உலக அளவில் இணைய சேவையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள பல நிறுவனங்கள் சீனாவை மையமாக வைத்தே இயங்கி வருகின்றன. இங்கு மட்டும் 800 மில்லியனுக்கு மேலான மக்கள் இண்டர்நெட்டை பயன்படுத்தி வருகிறார்கள். இவ்வளவு முன்னேற்றங்களை தொழில்நுட்ப உலகில் ஆற்றி வரும் சீனா இப்போது செயற்கை செய்திவாசிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது பெரும் சாதனையாக பேசப்படுகிறது.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close