[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

“பயங்கரமான மனிதர் நீங்கள்” - செய்தியாளரை விமர்சித்த ட்ரம்ப் !

cnn-reporter-jim-acosta-banned-from-white-house-after-donald-trump-brands-him-a-terrible-person

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சிஎன்என் செய்தியாளர் ஜிம் அகோஸ்ட்டாக்கும், ட்ரம்புக்கும் இடையே பெரிய வாக்குவாதமே நடைபெற்றது. 

அமெரிக்க இடைத்தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து, தேர்தல் முடிவுகள் குறித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மிகவும் கலகலப்பாகதான் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது. செய்தியாளர்கள் கொஞ்சம் மடக்கி மடக்கி கேள்விகள் கேட்டாலும், சற்றே நகைச்சுவையாக ட்ரம்ப் பதில் சொன்னார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்தச் செய்தியாளர் சந்திப்பில், சிஎன்என் செய்தியாளர் ஜிம் அகோஸ்ட்டாக்கும், ட்ரம்புக்கும் இடையே பெரிய வாக்குவாதமே நடைபெற்றது. 

ஜிம் அகோஸ்ட்டா முதலில் சாதாரணமாக தான் கேள்விகளை கேட்க தொடங்கினார். அகதிகள் சட்டம், அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு என பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றார். இதில் அகதிகள் வெளியேற்ற சட்டம் தொடர்பாக தான் ட்ரம்புக்கும், செய்தியாளர் அகோஸ்ட்டாவுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. போதும்..போதும் கேள்விகளை நிறுத்துங்கள் என்று சொல்லும் அளவிற்கு ட்ரம்ப் சென்றுவிட்டார். 

           

அதோடு விடவில்லை, தனது அதிகாரிகளை அழைத்து அந்தச் செய்தியாளர் வைத்திருந்த மைக்கை வாங்கச் சொன்னார். அந்தப் பெண் அதிகாரி அருகில் வந்து மைக்கை பிடுங்க முயற்சித்தார். ஆனால், அதனையும் பொருட்படுத்தாமல் செய்தியாளர் கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்தார். இதனால், மைக் முன்பு பேசிக் கொண்டிருந்த இடத்தில் இருந்து விலகி சென்றுவிட்டார் ட்ரம்ப். அதோடு, அந்தச் செய்தியாளரை பயங்கரமான மனிதர் என்று கடுமையாக திட்டி தீர்த்தார் ட்ரம்ப். இதனால், வெள்ளை மாளிகையில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

        

இதனிடையே, அதிபர் டொனால்டு ட்ரம்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜிம் அகஸ்ட்டா வெள்ளை மாளிகையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதில், வெள்ளை மாளிகையில் ஒரு பெண்ணிடம் அகஸ்ட்டோ வரம்பு மீறி செயல்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தன் மீதான நடவடிக்கைக்கு செய்தியாளர் ஜிம் அகஸ்ட்டோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை பொய் கூறுவதாக அவர் தெரிவித்தார். இது குறித்து சக பத்திரிகையாளர்கள் ஜிம் அவ்வாறு நடக்கவில்லை என்று விளக்கம் தந்துள்ளனர்.

முன்னதாக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் மேலவையான செனட் சபைக்கும், கீழவையான பிரதிநிதிகள் சபைக்கும் இடைக்காலத் தேர்தல் நடந்து‌ முடிந்தது. இதில் செனட் சபையில் மொத்தம் உள்ள 100 இடங்களில் 33 இடங்களுக்கும், பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இது தவிர மாகாண ஆளுநர்களுக்கான தேர்தலும் இணைத்து நடத்தப்பட்டது. 

          

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்தத் தேர்தலில், ஆளும் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. செனட் சபையை குடியரசுக் கட்சி தக்க வைத்துக் கொண்டாலும் பிரதிநிதி சபை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் வசம் சென்றுள்ளது. இதனால் தன்னிச்சையாக எந்த ஒரு மசோதாவையும் ட்ரம்பால் நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close