[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

கடலில் தத்தளித்த குழந்தையைக் காப்பாற்றிய நியூசிலாந்த் மீனவர்    

new-zealand-fisherman-rescues-toddler-from-ocean

நியூசிலாந்தில் கடலில் தத்தளித்த 18 மாத குழந்தையைக் காப்பாற்றி மீனவர் ஒருவர் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

நியூசிலாந்தைச் சேர்ந்த மீனவர் ஹஸ் ஹட். இவர் அக்டோபர் 26ம் தேதி காலையில் வழக்கம் போல் தான் செல்லும் கடற்பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது நீரில் ஏதோ பொம்மை மிதப்பது போன்று தெரிந்துள்ளது. அருகில் சென்று பார்த்தபோது அது குழந்தை எனத் தெரியவந்தது. குழந்தையை காப்பாற்றிய ஹஸ் ஹட் அருகே உள்ள தனது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். தனது கணவன் கையில் ஒரு குழந்தையோடு வருவதைக்கண்ட ஹட்டின் மனைவி வீட்டினுள் ஓடிச்சென்று துணியை எடுத்து வந்து குழந்தையின் ஈரத்தை போக்கியுள்ளார்.

இது குறித்து பேசிய அங்குள்ள பத்திரிகைக்கு பேசியுள்ள ஹட்டின் மனைவி ''நான் பார்த்தபோது என் கணவர் கையில் ஒரு குழந்தையை ஈரத்துடன் தூக்கி வந்தார். நான் வீட்டினுள்  ஓடிச்சென்று ஈரத்தை போக்குவதற்கு துணியை எடுத்து வந்தேன். குழந்தையின் முடி, ஆடை முழுவதும் மணல் ஒட்டி இருந்தது. மணலில் நகர்ந்து சென்று நீரினுள் விழுந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அருகில் இருந்தவர்களிடம் விசாரித்து குழந்தையின் பெற்றோரை கண்டு பிடித்தோம் என்று தெரிவித்தார்.

குழந்தையைக் காப்பாற்றியது குறித்து பேசிய ஹட், நான் முதலில் அது பொம்மை என்று நினைத்தேன். அருகே சென்று பார்த்தபோது முனகல் சத்தம் கேட்டது. அப்போது தான் அது குழந்தை என எனக்கு தெரிந்தது. கடல் அருகே போடப்பட்ட தற்காலிக கூடாரத்தில் இருந்து குழந்தை நகர்ந்து கடலுக்குள் வந்துள்ளது. நான் சரியான நேரத்தில் பார்க்கவில்லை என்றல் குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகி இருக்கும். சரியான நேரத்தில் குழந்தையைக் காப்பாற்றினேன் என்று தெரிவித்தார்.

சம்பவம் குறித்து பேசிய குழந்தையின் தாய், ''தற்காலி கூடாரத்தில் நாங்கள் தூங்கிவிட்டோம். குழந்தையை தண்ணீரில் மீட்டோம் என்று ஹட்டின் மனைவி கூறியபோது எனக்கு இதயமே நின்றுவிட்டது. குழந்தை உயிருடன் மீண்டு வந்தது கடவுளின் செயல். ஹட்டிற்கு நன்றிகள் சொல்ல வார்த்தைகளே இல்லை. குழந்தைகளுடன் வெளியே செல்லும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும். தற்காலிக கூடாரத்தை சரியாக அடைத்துக்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்துற்கு வந்த காவலர்கள் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குழந்தை தற்போது நலமாக இருக்கிறது. அது துறுதுறுவென இருக்கிறது. வெளி உலகத்தை பார்க்க ஆசைப்பட்டு வெளியேறிவிட்டான் என்று மீனவர் ஹட் நகைச்சுவையோடு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close