[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்

“நெவர் எவர் கிவ் அஃப்” - தன்னம்பிக்கை தரும் குட்டி பனிக்கரடியின் வீடியோ

viral-video-of-bear

தன்னம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் உள்ள குட்டி பனிக்கரடி ஒன்றின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

முடியுமா..? முடியாதா..? என்ற கேள்விக்கே இடமளிக்காமல் எப்போதும் என்னால் இதனை செய்து முடிக்க முடியும் என சொல்வதே தன்னம்பிக்கையின் அடையாளம். இரு கைகள் இல்லாமல் கூட வாழலாம். ஆனால் தன்னம்பிக்கை இல்லாமல் வாழாதே என பலர் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் தன்னம்பிக்கை என்பது அனைத்து மனிதருக்கும் தேவையான ஒன்று. ஒரு வேலைக்கு முயற்சி செய்கிறோம் என்றே வைத்துக்கொள்வோம். முதல் முயற்சியில் தோல்வி அடைந்தால் உடனே நம்மால் முடியாது என பின்வாங்கி விடக்கூடாது. எதனால் அந்த வேலை நம் கையை விட்டுச் சென்றது என்ற காரணத்தை கண்டறிந்து மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். அப்படி எத்தனை முறை உங்கள் முயற்சி தோல்வி கண்டாலும் முடிவில் உங்களின் முயற்சிக்கு ஒரு வெற்றி கிடைக்கும். இதுவே தன்னம்பிக்கைக்கு கிடைக்கும் வெற்றி.

இன்று போற்றப்படும் பல வெற்றியாளர்கள் பல தோல்விகளையும், இழிவான பேச்சுகளையும் சந்தித்தவர்களே. ஒவ்வொரு முறை தோல்வியை சந்திக்கும்போதும் மற்றவர்களின் கடுங்சொல்லுக்கு ஆளாகுவார்கள். அப்படியிருக்க அவர்கள் அனைவரும் தன்னம்பிக்கையும், விடா முயற்சியாலுமே வெற்றி பெற்றுள்ளனர்.

இப்படிப்பட்ட தன்னம்பிக்கைக்கு உதாரணமாக குட்டி பனிக்கரடியின் செயல் ஒன்று உள்ளது. குட்டி பனிக்கரடியின் தன்னம்பிக்கை வீடியோ தற்பாது சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில், அடர்ந்த பனி நிறைந்த பகுதியின் கீழ் புறத்தில் இருந்து தாயும், குட்டி பனிக்கரடியும் மேலே ஏறுகின்றன. ஒரு சில சறுக்கல்களுடன் கூடிய சிறிய முயற்சிக்கு பின் தாய் பனிக்கரடி மேற்புறத்தை அடைந்து விடுகிறது. ஆனால் குட்டி பனிக்கரடி ஒவ்வொரு முறையும் ஏற முயற்சி செய்கிறது. ஆனால் அது தோல்வியின்தான் முடிவடைகிறது.

தாய் பனிக்கடி மேல்நின்று குட்டி பனிக்கரடியை பார்த்தவாறே இருக்கிறது. இது நிச்சயம் குட்டி பனிக்கரடிக்கு ஆறுதலாக அமைந்திருக்கும். ஒரு கட்டத்தில் மேற்புறத்தை எட்டக்கூடிய அளவில் விறுவிறுவென மேலேறிய குட்டி பனிக்கரடி திடீரென சரியத் தொடங்கியது. ஆரம்பித்த இடத்தை விட இந்த முறை கூடுதலாக குட்டி பனிக்கரடி கீழே சரிந்துவிட்டது. ஆனால் துளி நேரமும் தாமதிக்காமல் குட்டி பனிக்கரடி அடுத்த முறை மேலேறியது. இந்த முறை முன்பை விட எச்சரிக்கையாக ஏறியதால் குட்டி பனிக்கரடி வெற்றிகரமாக தாய் இருக்கும் மேற்புறத்தை அடைந்தது. பின்னர் தாயும், சேயும் மகிழ்ச்சியில் ஓடின. ஒவ்வொரு முறை தோல்விக்கு பின்பும் துவண்டு போய் விடாமல் மறுபடி முயற்சி செய்து தான் நினைத்த காரியத்தை சாதித்த குட்டி பனிக்கரடியின் வீடியோவை பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் மட்டுமின்றி சிலர் இந்த வீடியோவை அழகாக பதிவு செய்த ஒளிப்பதிவாளரையும் பாராட்டி வருகின்றனர். ரஷ்யாவில்தான் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close