[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

சிங்கத்தை சீண்டிய இளைஞர் - பதிலுக்கு கடித்து குதறிய சிங்கம்..!

drunk-man-s-arm-mutilated-by-a-lion

ஹோண்டுராஸ் நாட்டில் போதையில் இருந்த இளைஞர் ஒருவர் சிங்கத்தின் கூண்டுக்குள் கையை நீட்டி பேசியுள்ளார். சிங்கம் பதிலுக்கு அந்த இளைஞரின் கையை கடித்து குதறியது.

பொதுவாக கூண்டுக்குள் இருக்கும் சிங்கத்தை வெகு தூரத்தில் நின்று பார்த்தாலே பலருக்கும் பயமாக இருக்கும். காரணம் சிங்கத்தின் அத்தகைய வீரம்.  பிடரி மயிரும் அதன் நடையும் எவ்வளவு தைரியமான மனிதரையும் ஒரு சில நிமிடங்களில் பயம் கொள்ள செய்துவிடும். ஆனால் ஒருவர் மதுபோதையில் இருந்தால் உலக நடப்பெல்லாம் தெரியவா போகிறது.

குடித்துவிட்டால் சும்மா போகின்றவர்களை எல்லாம் தேவையில்லாமல் வம்புக்கு இழுப்பார்கள். அப்படி போதையில் இருந்த ஹோண்டுராஸ் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிங்கத்திடமே தனது சேட்டையை செய்ய சிங்கம் பதிலுக்கு தனது  வேலையை வசமாக காட்டியுள்ளது.

தெகுசிகல்பா என்ற இடத்தில் உள்ள விலங்கியல் பூங்காவுக்கு சென்ற இளைஞர் ஒருவர் குடி போதையில் கூண்டுக்குள் உள்ளே கையை நீட்டி சிங்கத்தை நோக்கி பேசியுள்ளார். சிறிதுநேரம் பொறுமையாக இருந்த சிங்கம், திடீரென பாய்ந்து அந்த இளைஞரின் கையைக் கடித்தது. ஒருவழியாக கூண்டுக்குள் இருந்து கையை ரத்தமும் வலியுடன் மீட்டுள்ளார். படுகாயமடைந்த அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close