[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கஜா புயலால் வீடுகளை இழந்த 50 விவசாயிகளுக்கு வீடு கட்டித்தரப்படும் - நடிகர் ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS நக்கீரன் கோபாலுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு டிச.21ம் தேதி வரை தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தொடர் மழையால் வேலூர், திருவாரூர், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS தொடர் மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.88 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.74.99 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை

நான்தான் பிரதமர், என்னை நீக்க அதிகாரம் இல்லை: ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு

i-will-remain-lankan-pm-naming-rajapaksa-unconstitutional-wickremesinghe

இலங்கையின் பிரதமராக தானே நீடிப்பதாகவும் தம்மை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் சிறிசேனவிற்குக் கிடையாது எனவும் ரணில் விக்கரமசிங்கே கூறியுள்ளார்

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணியில் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி இடம்பெற்றிருந்தது. 2015 பொதுத் தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பெற்றது. இந்த கூட்டணியில் சமீப காலமாக பிளவு ஏற்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.

பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேவிற்கு எதிராக சிறிசேன ஆதரவாளர்கள் சிலர் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, ராஜபக்சே புதிய பிரதமராக நேற்று பதவியேற்றுள்ளார்.

ரணில் விக்கிரம சிங்கே தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணி வாபஸ் பெற்றதை அடுத்து உடனடியாக இந்த அதிரடி அரசியல் மாற்றம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், தம்மை பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யும் அதிகாரம் சிறிசேனவிற்குக் கிடையாது என ரணில் விக்கரமசிங்கே கூறியுள்ளார். 

இதுபற்றி அவர் பேசும்போது, தொடர்ந்து பிரதமராக தான் பதவியில் நீடிப்பதாகவும் ராஜபக்சேவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தது சட்டவிரோதமானது என்றும் குறிப்பிட்டார். பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்படடதைத் தொடர்ந்து, ஆதரவாளர்களுடன் ரணில் விக்கரமசிங்க தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close