[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வராக இருப்பார் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்கிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS 2021ம் ஆண்டு அரசியலில் தமிழ் மக்கள் மிகப் பெரிய அதிசயத்தை, அற்புதத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் நிகழ்த்துவார்கள் - ரஜினிகாந்த்

நீரில் மூழ்கிய சிறுமியை பாய்ந்து காப்பாற்றிய புட் டெலிவரி பாய்!

video-of-delivery-boy-s-prompt-reaction-to-save-six-year-old-from-drowning

தண்ணீரில் மூழ்கிய சிறுமியை, பாய்ந்து காப்பாற்றிய புட் டெலிவரி பாயை சமூக வலைத்தளங்களில் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

சீனாவில் நீரில் மூழ்கிய சிறுமியை இளைஞர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. இவர்தான் நிஜ ஹீரோ என்று அந்த இளைஞர் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார். சீனாவின் சிஜியாங் நகரில் கால்வாயின் அருகே இரண்டு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு சிறுமி தண்ணீரில் இறங்கியுள்ளார். தண்ணீர் படியில் நின்று கொண்டிருந்த அந்தச் சிறுமி திடீரென்று வழுக்கி தண்ணீருக்குள் விழுந்து தத்தளித்தார். இதனைக்கண்ட மற்றொரு சிறுமி செய்வதறியாது அலறியுள்ளார். 

அப்போது அவ்வழியா இரு சக்கர வாகனத்தில் சென்ற டெலிவரி பாய் ஹி லின்ஃபெங் ஒருவர் நீரில் சிறுமி மூழ்குவதைக் கண்டுள்ளார். உடனே தனது செல்போனை தரையில் வைத்துவிட்டு தண்ணீரில் குதித்து மூழ்கும் சிறுமியை காப்பாற்றியுள்ளார். சிறுமியை காப்பாற்றியது மட்டுமல்லாமல் மீண்டும் தண்ணீரில் இறங்கிய அவர்,  தண்ணீரில் மிதந்து சென்ற சிறுமியின் செருப்பை எடுத்து மேலே கொண்டுவந்தார்.

இது குறித்து பத்திரிகைக்கு பேட்டியளித்த ஹி லின்ஃபெங், “நான் சாலையில் வேகமாக சென்றுக்கொண்டிருந்தேன். அப்போது சாலையில் நின்றிருந்த சிறுமி அலறினார். அப்போது தண்ணீரில் ஏதோ சலசலப்பை உணர்ந்தேன். அங்கே நீரில் ஒரு சிறுமி மூழ்குவதை பார்த்தேன். உடனே தண்ணீரில் குதித்து சிறுமியைக் காப்பாற்றினேன். பிறகு வீடு வரை சிறுமி பாதுகாப்பாக சென்றாரா என்பதையும் நான் உறுதி செய்த பின்னே நான் கிளம்பினேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஹி லின்ஃபெங்கின் இந்தச் செயலை அனைவரும் பாராட்டு வருகின்றனர். அவர் வேலை பார்க்கும் நிறுவனர் அவருக்கு மாடல் ட்ரைவர் என்ற விருதும், பரிசுத்தொகையும் கொடுத்து பாராட்டியுள்ளனர்.

வீடியோ : நன்றி CGTN

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close