[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

“கஷோகி படுகொலை வரலாற்றிலேயே மோசமானது” - அதிபர் ட்ரம்ப் 

worst-cover-up-ever-says-trump-on-apparent-khashoggi-murder-plot

கஷோகி படுகொலை செய்யப்பட்டு அக்கொலையை மறைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சி வரலாற்றிலேயே மிகவும் மோசமானது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சவுதி மன்னர், சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’பத்திரிகையில் எழுதி வந்தவர், ஜமால் கஷோகி . தனது காதலியை திருமணம் செய்து கொள்வதற்கா‌க ஜமால் கஷோகி கடந்த 2 ஆம் தேதி  துருக்கி தலைநகர் இஸ்தான்புல் சென்றிருந்தார். அப்போது முதல் மனைவியை விவகாரத்து செய்ததற்கான ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்காக இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு சென்ற அவர், அதற்குப் பின் வெளியே வரவில்லை. சவுதி தூதரகத்துக்குள் சென்ற கஷோகியை தூதரக அதிகாரிகள் கொலை செய்துவிட்டதாக துருக்கி அரசும், ஊடகங்களும் சந்தேகம் எழுப்பின. ஆனால், சவுதி அரசு இதனை தொடர்ந்து மறுத்து வந்தது. 

ஆனால், வெளிநாட்டு ஊடகங்கள் அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்று உறுதியாக கூறி வந்தன. அமெரிக்க அதிபர் டிரம்ப், பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்நாட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். ஜமால் கஷோகி மாயமானது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக துருக்கி போலீஸ், தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தியது.

பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதுகுறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் சர்வதேச நாடுகள் கொடுத்த நெருக்கடியை தொடர்ந்து, அவர் கொல்லப்பட்டார் என்பதை ஒப்புக் கொண்டது சவுதி அரேபியா. தூதரக அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதையடுத்து நடந்த சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக சவுதி அரேபியாவின் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். 

இது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், கஷோகி படுகொலை விவகாரத்தில் பெரும் சதித் திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும், தவிர அந்தக் கொலையை மறைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சி வரலாற்றிலேயே மிகவும் மோசமானது என்றும் கூறியுள்ளார். இத்தகைய மோசமான செயலை செய்தவர்களுக்கு நிச்சயம் மிகப் பெரிய பிரச்னை காத்திருக்கிறது என்றும் ட்ரம்ப் கூறினார். பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த ட்ரம்ப், கஷோகி கொலை வழக்கில் சவுதியின் முக்கிய அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது என்றும், பட்டத்து இளவரசருக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close