[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

பேருந்துகள் மோதல்: 19 பேர் உடல் நசுங்கி பலி

19-passengers-killed-in-pakistan-accident

பாகிஸ்தானில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 35க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் டிஜி கான் நகரில் இருந்து தங்கள் சொந்த ஊரான முல்தானுக்கு இரண்டு பேருந்துகளில் சுமார் 70 பேர் திரும்பிக்கொண்டி ருந்தனர். அனைவரும் உறவினர்கள். இந்த பேருந்துகள் காஸி காட் பகுதியில் வந்தபோது திடீரென மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 15 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 35-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து சென்ற மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் இறந்தனர். இதையடுத்து, சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

பேருந்துகள் மோதிய விபத்தில் 19 பேர் பலியானது குறித்து அறிந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஜனாதிபதி ஆரிப் அல்வி ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக அதிகமான சாலை விபத்துகள் நடந்துவருகின்றன. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close