[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழகம் தனித்தன்மையுடன் விளங்குகிறது என்பதையே திமுக பெற்றுள்ள வெற்றி காட்டுகிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் 6,83,697 வாக்குகள் பெற்று வெற்றி
  • BREAKING-NEWS களத்தில் இறங்கியபோது உறுதியளித்தபடி தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது; திமுகவின் வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கு நன்றி -மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளிவந்துள்ளது; இரண்டு தேர்தல்களிலும் நாம் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெற்று தந்துள்ள மக்களுக்கு நன்றி - ஸ்டாலின்
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்; மோடி அரசு ஜனநாயக கொள்கைகளை காக்கும் என நம்புகிறேன் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கர்நாடக எம்எல்ஏக்கள், அமைச்சர்களுடன் நாளை முதல்வர் குமாரசாமி ஆலோசனை

ரூ.10 கோடிக்கு ஏலம் போன ஓவியம் : அடுத்தநொடியே நார்நாராக கிழிப்பு

banksy-painting-self-destructs-moments-after-being-sold-for-rs-10-crore-at-auction

லண்டனில் ரூ.10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஓவியம் ஒன்று, அடுத்த நொடியே நார்நாராக கிழிக்கப்பட்ட சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

லண்டனில் உள்ள பிரபல அரங்கில் ஓவிய ஏலம் நடைபெற்றது. இதில் உலக நாடுகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு ஓவியங்களை ஏலம் எடுத்தனர். அந்த ஏலத்தில் லண்டன் ஓவியரான பாங்கிசியின் ஓவியமான சிறுமி ஒருத்தி, பறக்கும் சிவப்பு பலூனை நோக்கிக் கையை நீட்டும் ஓவியமும் இடம்பெற்றிருந்தது. அந்த ஓவியம் ஏலத்திற்கு வந்தபோது ரூ.10 கோடிக்கு அதனை ஒருவர் ஏலம் எடுத்துள்ளார். திடீரென்று யாரும் எதிர்பாராத விதமாக அந்த ஓவியம் கீழ்நோக்கி நகர்ந்து நார்நாராக கிழிந்தது. அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாயினர். ஓவியத்தின் கீழே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மெஷின் மூலம் ஓவியம் கிழிக்கப்பட்டதாக ஓவியர் பாங்சி தெரிவித்துள்ளார். 

அழிவுதான் கலைகளில் மிகப்பெரியது என்று மக்களுக்கு உணர்த்தவே இவ்வாறு செய்ததாகவும், அந்த ஓவியர் இதனை இப்படி கிழிப்பதற்காகவே ரிமோட் மூலம் இயங்கும் பிரத்யேக மெஷினையும் தான் அதில் பொருத்தியதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஏலம் எடுக்கப்பட்டவருக்கு உரிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அவர் ஏற்றுக்கொள்வாரா என்று தெரியவில்லை என்றும் ஏலத்திற்கு ஏற்பாடு செய்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. "The urge to destroy is also a creative urge" - Picasso

A post shared by Banksy (@banksy) on

 

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close