[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

the-2018-nobel-prize-in-physiology-or-medicine-has-been-awarded-jointly-to-james-p-allison-and-tasuku-honjo

ஆண்டுக்கு ஒருமுறை 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு பெறும் ஒவ்வொருவருக்கும் ஒரு தங்கப் பதக்கமும், இரு பட்டயங்களும் வழங்கப்படும். இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை தற்போது அறிவிக்கப் போவதில்லை என்றும், அடுத்த வருட விருதின் போது சேர்த்து வழங்கப்படும் என்றும் நோபல் குழு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், முதலாவதாக, இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. புற்று நோய் தொடர்பான மருத்துவ கண்டுபிடிப்புக்காக ஜேம்ஸ் பி.ஆலீஸன், தசுகோ ஹோஞ்ஜோ ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட இருவருக்கும் தலா ரூ4 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும். 

            

இதனையடுத்து, இயற்பியல் துறைக்கான விருதை அக்டோபர் 2 ஆம் தேதியும், வேதியியலுக்கு 3 ஆம் தேதியும், அமைதிக்கான நோபல் பரிசை 5 ஆம் தேதியும், அக்டோபர் 8 ஆம் தேதியன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படவுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close