[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்
  • BREAKING-NEWS தென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்

இந்தோனேஷியாவில் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 832 ஆக உயர்வு

earthquake-tsunami-strike-indonesia-killing-at-least-384

இந்தோனேசியாவில் பலு நகரத்தை தாக்கிய சுனாமி பேரலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேசிய கடல் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலு நகரத்தை ஆழிப் பேரலைகள் தாக்கின. சுலாவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளிகளாகப் பதிவானது. இந்நிலையில் சுலாவேசியின் கடலோர நகரான பலுவில் திடீரென சுனாமி தாக்கியது. மூன்று மீட்டர் உயரத்துக்கு எழுந்த அலைகள் ஊருக்குள் புகுந்தன.

சுனாமி பேரலையில் சிக்கி 832 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரை காணவில்லை என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சுனாமி பாதிப்பால் பலு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close