[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

ஹெச்4 விசாவை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு

usa-plans-to-cancell-h4-visa

அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களின் மனைவி அல்லது கணவன் அமெரிக்காவில் பணியாற்ற உரிமை வழங்கும் ஹெச்4 வகை விசாக்களை ரத்து செய்ய டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனால் சுமார் ஒன்றேகால் லட்சம் பேர் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான உரிமத்தை இழப்பார்கள். இதில் 93 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பதும் அவர்கள் பெரும்பாலும் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹெச்4 விசா அடுத்த மூன்று மாதங்களுக்குள் ரத்து செய்யப்படும் என நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது ஹெச்4 விசா அறிமுகப்படுத்தப்பட்டது. வெளிநாட்டில் இருந்து அமெரிக்கா சென்று ஹெச்1பி விசா மூலம் பணிபுரியும் ஊழியர்கள், தங்கள் துணைவர் மற்றும் 21 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அழைத்து வந்து, அமெரிக்காவிலேயே வேலை மற்றும் படிப்பு பெற இந்த விசா வழிவகை செய்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close