[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

சிங்கக்குட்டியுடன் அமைச்சர் ஜெயக்குமார்

minister-jayakumar-with-lion-in-japan

ஜப்பான் சுற்றுப் பயணத்தில் சிங்கக்குட்டியுடன் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பலரால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 20-ஆவது சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில், இந்தியா சார்பில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அப்போது ஜப்பானின் பாரம்பரிய நிகழ்ச்சியான பார்ரெல் தொடக்கத்தை (Barrel Opening) அவர் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜெயக்குமாருடன், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலாளர் கோபால், மீன்வளத்துறை இயக்குநர் சமீரன், மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் ஜானி டாம் வர்க்கீஸ் ஆகியோரும் பங்கேற்றனர். இதுதவிர அங்குள்ள இந்திய தூதரகம் மூலன் ஜப்பான் நாட்டில் உள்ள தொழிலதிபர்களை சந்தித்த அவர்,  தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜப்பான் சுற்றுப் பயணத்தில் சிங்கக்குட்டியை மடியில் வைத்து அமைச்சர் ஜெயக்குமார் புகைப்படம் எடுத்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close