கேரள வெள்ளப்பாதிப்பு நிவாரணத்துக்காக ரூ.35 கோடியை கத்தார் அளிக்கிறது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மாநிலம் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் வீடுகளின் மாடி வரை வெள்ளம் சூழந்துள்ளது. இதனால் பலரும் மொட்டை மாடியிலும், கூரை களி லும் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்படுபவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 357 பேர் மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்து உள்ளனர். இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.
பல்வேறு தரப்பினர் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு உதவிகள் வழங்கி வருகின்றனர். நடிகர், நடிகர்கள், மாநில அரசுகள் பண உதவியை வழங்கி வருகின்றன. இந்நிலையில் அரபு நாடுகளில் ஒன்றான கத்தார் ரூ.35 கோடியை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குகிறது. கத்தார் பிரதமர் சேக் அப்துல்லா பின் நசீர் பின் கலிபா அல் தானி, இதைத் தெரிவித்துள்ளார். கத்தாரில் கேரளாவைச் சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றுக் கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஜெயலலிதா ஆன்மாவிற்கு எதிரான கூட்டணி” - அதிமுகவை விமர்சித்த கருணாஸ்
“கூட்டணி மட்டும் முக்கியமல்ல; நட்பும் முக்கியம்” - விஜயகாந்த் சந்திப்பு பற்றி பியூஷ்
இரண்டு வயது குழந்தைக்கு எச்.ஐ.வி ரத்தம்? - மீண்டும் ஒரு சர்ச்சை
“மனைவியை சுட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவர்” - அமெரிக்க சம்பவம்
மேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்: வைரலாகும் வீடியோ
15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக ! என்ன சொல்கிறது வரலாறு ?
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புல்வாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?