பிறந்தவுடன் உயிரிழந்த குட்டியை, தாய் திமிங்கலம் தொடர்ந்து 17 நாட்கள் தனது முதுகில் சுமந்தபடி திரிந்தது.
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் அண்மையில் திமிங்கலம் ஒன்று குட்டியை ஈன்றது. பிறந்த சில நாட்களே ஆன இந்தக் குட்டி திடீரென உயிரிழந்தது. இதனால், சோகமடைந்த தாய் திமிங்கலம், குட்டியை சுமந்தபடி தொடர்ந்த 17 நாட்கள் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளது.
இதுபற்றி ஆய்வு நடத்திய கடல்வாழ் உயிரின ஆய்வாளர்கள், அந்தத் திமிங்கலம் 1,600 கிலோ மீட்டர் தூரம் வரை குட்டியை சுமந்தபடி நீந்தியிருப்பதாக தெரிவிக்கின்றனர். உயிரிழந்த குட்டியை பிரிய மனமில்லாமல், தாய் திமிங்கலம் 17 நாட்கள் வரை நடத்திய இந்தப் பாசப்போராட்டம், கடல்வாழ் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பழங்குடி இன மக்களின் உரிமை காக்க அவசர சட்டம் வேண்டும் - திருமாவளவன்
தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
10 ஆயிரம் பேருடன் போரிட்ட 21 சீக்கியர்கள் ! இந்திய வீரத்தை மெச்சும் "கேசரி" டிரைலர்
புல்வாமா தாக்குதலுக்கு ஐநா பாதுகாப்பு சபை கண்டனம்
திமுக கூட்டணி தொகுதி பங்கீடு: விசிகவுக்கு எத்தனை தொகுதி?