[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

ஒரு புகைப்படம் - வெளிப்பட்ட பங்களாதேஷின் உண்மை முகம்

a-viral-photo-of-lovers-made-a-photographer-to-loose-his-job

ஜிபோன் அகமத் - பங்களாதேஷ் பத்திரிகை ஒன்றின் புகைப்படக்காரர். வித்தியாசமான புகைப்படங்களை எடுப்பதில் வல்லவர். ஆனால் அவர் எடுத்த புகைப்படமே அவருக்கு பிரச்னையாகும் என எதிர்பார்த்திருக்க மாட்டார். அஹமத் சில நாட்களுக்கு முன்பு மழை பெய்து கொண்டிருந்த சமயம் வெளியே சென்றிருந்தார். காதலர்கள் இருவர் மழையில் ஒரு இடத்தில் அமர்ந்து முத்தம் கொடுத்துக் கொண்டனர். அவர்களின் அனுமதியோடு அதனை புகைப்படமாக எடுத்தார் அஹமத். 

வீட்டுக்கு வந்ததும் தான் எடுத்த புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் பதிவிட்டார். அவ்வளவுதான் தாமதம் புகைப்படம் வைரலானது. பலரும் பகிர ஆரம்பித்தனர். நிறைய நேர்மறையான கருத்துகள் புகைப்படம் குறித்து தெரிவிக்கப்பட்டது. அதோடு சேர்த்து காதலர்களை மிரட்டும் தொனியில் சில கருத்துகளும் அந்த புகைப்படத்தின் கீழ் எழுதப்பட்டன. அஹமதின் புகைப்படத்தை பகிர்ந்திருந்த ஒருவர் “இதுவரை ரகசியமாக நடந்த விஷயங்கள் எல்லாம் இப்போது வெளிப்படையாக நடக்கிறது, இவர்களது அட்டூழியம் தாங்கவில்லை, இனி பொது இடங்களில் அமர்ந்து கொண்டு முகம் சுழிக்கும் வகையில் காதல் செய்வார்கள்” என்று எழுதியிருந்தார். இன்னும் சில தகாத வார்த்தைகளால் அஹமதையும் , காதலர்களையும் வசைபாடினர். 

புகைப்படத்தை அஹமது எடுத்ததை அறிந்து கொண்ட அவரது அலுவலகம் இதனை எவ்வாறு படமெடுத்து பதிவிடலாம் என அவரை பணி நீக்கம் செய்து விட்டதாக அஹமது தெரிவித்தார். அலுவலகம் வந்த தனது அடையாள் அட்டையை வாங்கிக் கொண்டு அவரை திருப்பி அனுப்பியதாக புகார் கூறியுள்ளார் அஹமத். ஆனால் அவரது அலுவலகமோ அதனை மறுத்து விட்டது. இது குறித்து அஹமது கூறுகையில் “ காதலர்களின் ஒப்புதலோடு புகைப்படம் எடுத்து அலுவலகத்திற்கு அனுப்பினேன், ஆனால் ஆசிரியரோ இது தவறான ஒன்றை பிரதிபலிக்கிறது என்றார், ஆனால் நானோ உண்மையான காதலின் எண்ணம் வெளிப்படுவதை விளக்கினேன் , அவர்களோ புரிந்து கொள்ள தயாராக இல்லை என்றார். 

இதற்கிடையில் இப்படிப்பட்ட ஒரு புகைப்படத்தை எடுக்கலாமா என கூறி அஹமது தாக்கப்பட்டுள்ளார். காதலர்களீன் முகவரி கேட்டும் அவர் துன்புறுத்தப்பட்டுள்ளார். இது குறித்து தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறிய அஹமத், இதில் என்ன தவறு இருக்கிறது, தாங்களாக அவர்கள் முத்தமிட்டு கொள்கிறார்கள், அவர்களின் உணர்வின் வெளிப்பாடு இது, எப்போது இவர்களின் எண்ணம் மாறப்போகிறது என கேள்வி எழுப்பினார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close