[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜனநாயகத்தை நசுக்கும் பாகிஸ்தான் : பதவிக்காலத்தை முடிக்காத பிரதமர்கள் !

pakistan-election-still-29-pm-s-incomplete-their-tenure

பாகிஸ்தானில் இதுவரை பதவியேற்ற 29 பிரதமர்களில் ஒருவர் கூட பதவிக்காலத்தை முழுவதும் நிறைவு செய்யவில்லை.

பாகிஸ்தான் அரசின் பதவிக்காலம் கடந்த மே 31ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதனால் அங்கு பொதுத்தேர்தல் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே, பிரதமர் பதிவியில் இருந்த நவாஸ் ஷெரீஃப் பனாமா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது குடும்பத்தினரும் இதில் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர் உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் வாக்களித்து வருகின்றனர். 

தற்போது நடக்கும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர் பாகிஸ்தானின் 30வது பிரதமர் ஆவார். இதற்குமுன் அங்கு பதவி வகித்த 29 பிரதமர்களில் ஒருவர் கூட தங்கள் பதவிக்காலத்தை நிறைவு செய்யவில்லை. அதற்குள் அவர்கள், ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு, ராஜினாமா, பெரும்பான்மை இழப்பு, தகுதியற்ற நிலை உள்ளிட்ட காரணங்களால் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் இந்த வரலாறு, அந்நாட்டு ஜனநாயக கொள்கையை நசுக்கி வருகிறது என்பதை வெளிக்காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

இதற்கு முன்னர் இருந்த பிரதமர்களில் ஆயுப் கான் என்பவர் 1958ஆம் ஆண்டில் பதவியேற்று 4 ஆண்டுகள் மட்டுமே பதவி வகித்தார். இதுவே குறைந்த நாட்கள் வகிக்கப்பட்ட பதவிக்காலம் ஆகும். அவருக்கு அடுத்தபடியாக குறைந்த நாட்கள் பதவி வகித்தவர், 1971ஆம் ஆண்டு பதவியேற்ற நூருல் அமின். இவர் 13 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தார். 29 பிரதமர்களிலேயே அதிக காலம் பதவி வகித்தவர் யூசப் ராசா கிலானி. 2008ஆம் ஆண்டு பதவியேற்ற இவர், 50 மாதங்கள் மற்றும் 2 நாட்கள் பதவியில் நீடித்தார். பாகிஸ்தானில் நீண்ட வருடங்கள் ஆட்சி செய்தவர்களில் ராணுவத் தளபதிகள் தான் உள்ளனர். 1958-1971 இடைப்பட்ட காலத்தில் மாஜ், மிர்சா, ஆயுப் கான் மற்றும் யாஹா கான் ஆகிய ராணுவத் தளபதிகள் ஆட்சி செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து 1977 முதல் 1988 வரை ஜியா உல் அக் யும், 1999-2008 காலகட்டத்தில் முஷராஃப்-ம் ராணுவ ஆட்சி செய்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close