[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

ஜப்பானில் மழைக்கு 141 பேர் பலி: வீடு வீடாக தேடும் மீட்புக்குழு!

japan-rescuers-go-house-to-house-as-flood-toll-hits-141

ஜப்பான் நாட்டில் மழை வெள்ளத்துக்கு இதுவரை 141 பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை வீடு வீடாக மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த வியாழக்கிழமையில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருவதால் அந்தப் பகுதி கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. குராஷிகி பகுதியில் வெள்ளத்தில் பல வீடுகள் மூழ்கியுள்ளன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. வெளியேற முடியாமல் தங்கள் வீடுகளின் மேற்கூரைகளில் சிலர் தஞ்சமடைந்துள்ளனர். பலரது வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. சாலைகளும் மோசமாக பாதிப்படைந்துள்ளன. 

தொடர்மழை மற்றும் வெள்ளம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 141 ஆன உயர்ந்துள்ளது. ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர்.

தாழ்வான பகுதியில் வசித்து வரும் 20 லட்சம் பேர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். நில சரிவு மற்றும் வெள்ளத்தால் சிக்கியவர்களை மீட்க, மீட்பு படையினர் வீடு வீடாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்  ளனர்.

‘ஒவ்வொரு வீடாக சென்று தேடுதல் நடத்தி வருகிறோம். யாரும் உள்ளே மாட்டியிருக்கிறார்களா என்று தேடி வருகிறோம். எங்களால் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக உதவிகளை செய்து வருகிறோம்’ என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புகைப்பட கேலரி

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close