[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

வெற்றிகரமான ஆபரேஷனில் 8 சிறுவர்கள் மீட்பு: சலிப்பில்லாமல் தொடரும் வீரர்களின் மீட்புப் பணி..!

8-boys-rescued-form-thailand-cave

தாய்லாந்தில் வெள்ளம் சூழ்ந்த குகையில் சிக்கிய சிறுவர்களுள் இதுவரை 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுங் குகைக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி 12 கால்பந்து விளையாடும் சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் சென்றுள்ளனர்.  அப்போது பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், குகையில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். 9 நாட்களுக்குப் பின்னர் கடந்த 2-ம் தேதி அவர்கள் குகைக்குள் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் வானிலை உள்ளிட்ட சிக்கல்களால் 8-ம் தேதியில் இருந்துதான் சிறுவர்களை மீட்க முடிந்தது. 8-ஆம் தேதி 4 சிறுவர்கள் முதற்கட்டமாக மீட்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். கடந்த முறை மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்களை விட நேற்றைய மீட்புப் பணிக்கு அதிகம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில் இன்னும் மீதமுள்ள 4 சிறுவர்களும் அவர்களின் பயிற்சியாளரும் குகைக்குள் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களையும் பத்திரமாக மீட்பதற்கான பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.  சேறும், நீரும் சூழ்ந்துள்ள குகையில் கடும் இருளில் வெளிநாட்டு நீச்சல் வீரர்கள், மருத்துவர்கள் உதவியுடன் சிறுவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று அல்லது நாளை காலைக்குள் அவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு விடுவார்கள் என கூறப்படுகிறது. இதனிடையே குகைகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close