[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

'நான் நல்லா இருக்கேன் ஆனா ரொம்ப குளிருது' குகையில் தாய்லாந்து சிறுவன் கடிதம் !

to-all-the-parents-thai-coach-s-handwritten-note-from-cave

ஜூன் 23-ஆம் தேதி, 16 வயதுக்கு உட்பட்ட 12 கால்பந்தாட்ட வீரர்களும் அவர்களின் பயிற்சியாளரும் தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்கு சென்றனர். அப்போது திடீரென மழை பெய்து குகை நுழைவுவாயிலில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இவர்கள் வெளியே வர முடியாமல் குகைக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். தாய்லாந்து ராணுவம் இவர்களை மீட்கும் பணியை தொடங்கியது. தொடர்ந்து பெய்த மழை, வடியாத வெள்ளம், சேறு, சகதி ஆகியவை மீட்பு பணிகளில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சூழலில்தான், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு மீட்புக் குழுவினரும் மீட்பு பணியில் இணைந்தனர். பல்வேறு தொழில்நுட்ப முறைகளை கையாண்டு குகையில் தேங்கி இருந்த வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. அதே வேளையில் குகைக்குள் செல்ல வேறு வழிகள் உள்ளனவா என்றும் ஆராயப்பட்டது. இந்த 13 பேரும் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்ற நோக்கில் கிட்டதட்ட 1000 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 13 பேரும் குகையின் ஒரு பகுதியில் தஞ்சமடைந்திருப்பதை, பிரிட்டனை சேர்ந்த மீட்பு குழுவினர் கண்டறிந்து வீடியோ எடுத்து வெளியிட்டனர்.

இதனால் 13 பேரும் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மீட்பு பணிகள் முடிவிடப்பட்டுள்ளது. இந்தச் சிறுவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த முன்னாள் கப்பல் படை வீரர் ஒருவர் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டு காரணமாக உயிரிழந்தார். இதனால் சிறுவர்களுக்கு என்ன ஆனது என்று கவலை பலருக்கும் ஏற்பட்டது. இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையிடம் தாய்லாந்து கால்பந்தாட்ட சிறுவர்கள் அணியின் பயிற்சியாளரான எக்காபால் சந்த்தாவாங்வும், சிறுவர்களும் கடிதம் ஒன்றை அளித்தனர். அதை தங்களுடைய தாய் நேவி சீல் ஃபேஸ்புக்கத்தில் கடற்படையினர் வெளியிட்டனர். 

அதில் பயிற்சியாளர் மிகவும் உருக்கமாக பெற்றோர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் "பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம். சிறுவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். நான் உங்களின் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்வேன். எங்களுக்கு தொடர்ந்து மனம் தைரியம் அளித்தற்கு நன்றி, இப்படி ஒரு நிகழ்வு நடந்ததற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அந்தக் கடிதத்தில் சிறுவன் ஒருவனும் தன் பெற்றோருக்கு இப்படி எழுதியுள்ளான் "நான் நலமாக இருக்கிறேன்.ஆனால் இங்கே மிகவும் குளிராக இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளான்.

குகையில் சிக்கியுள்ள 13 பேரையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில். தாய்லாந்து மக்கள் இந்த 13 பேரும் உயிருடன் திரும்ப வேண்டும் என்ற பிரார்த்தனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close