[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்

பக்கத்து வீட்டில் இருந்த அக்காவை ஃபேஸ்புக்கில் தேடிய தங்கை !

adopted-woman-s-search-for-sister-led-her-around-us-found-her-next-door


மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தை நாம் அனைவரும் பார்த்திருப்போம். அதில், தத்தெடுத்து வளர்க்கப்படும் குழந்தை, தன்னை பெற்ற அம்மாவை, வளர்ப்பு பெற்றோர்களுடன் இலங்கைக்கு சென்று தேடுவது போல படம் செல்லும். இதேபோல அமெரிக்காவிலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஹிலாரி ஹாரிஸ். இவரை அவரது பெற்றோர்கள் குழந்தை பருவத்திலேயே வேறு ஒரு தம்பதியினருக்கு தத்து கொடுத்து விட்டார்கள். ஆனால், பெரியவள் ஆன பின்பு ஹிலாரிக்கு தன்னை தத்துக் கொடுத்த பெற்றோர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தேடி அலையத் தொடங்கி இருக்கிறார். இறப்பதற்கு முன்பாக தன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையாவது பார்த்துவிட வேண்டும் என்று தன் கணவருடன் அமெரிக்கா முழுவதும் சுற்றித் திரிந்திருக்கிறார்.

ஹிலாரி தான் தத்து கொடுக்கப்பட்ட ஆவணங்களை எடுத்தார். அதில் தன் அக்காவின் பெயர் டான் ஜான்சன்ஸ் என இருந்தது. உடனே, ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் "டான் ஜான்சன்ஸ்" என பெயரிட்டு தேடியுள்ளார். ஆனால், அதில் ஏகப்பட்ட பெயர்கள் வந்து விழுந்தாலும், தன் அக்காவை கண்டுப்பிடிக்க முடியவில்லை. இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்த நிலையில், ஹிலாரி தம்பதியினர் அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதிக்கு மாற்றலாகி சென்றனர். இவர்கள் குடியேறிய பகுதியில்தான் ஹிலாரியால் தேடப்படும் அக்கா டான், வசித்திருந்தாக தத்துக்கொடுத்த ஆவணத்தில் தெரிய வந்தது. அப்போதுதான் ஹிலாரிக்கு ஓர் யோசனை வந்தது. அதுதான் உருவ ஒற்றுமை. ஆம் ஹிலாரிக்கும், டானுக்கும் உருவ ஒற்றுமை ஏறக்குறைய ஒன்றுதான். இதை வைத்து அக்கம் பக்கத்தினரிடம் டானை பற்றி விசாரிக்கலாம். ஆனால் ஹிலாரிக்கு 31 வயது. அக்கா டானுக்கு 50 வயது. இந்த வயது வித்தியாசம் காரணமாக அடையாளம் கண்டுக்கொள்வதில் பலருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஒரு நாள் ஹிலாரியின் கணவர் ஹாரிஸ் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பெண்ணை கவனித்தார். அப்போது தன் மனைவியிடம் "அங்கே பார் அவளை, நீ வயதானால் அந்தப் பெண்ணைப் போலதான் இருப்பாய், அவள் ஏன் நீ தேடும் உன் அக்கா டானாக இருக்கக் கூடாது ? என கேட்டு ஹிலாரியே யோசிக்க வைத்துள்ளார். ஆனால், ஹிலாரியின் மனதில் அந்தப் பெண்ணை பற்றி விசாரித்துவிட வேண்டும் என எண்ணி நாட்கள் நகர்ந்துக்கொண்டே இருந்தது. அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியே வரும்போதெல்லாம் ஹிலாரி அவளுக்கு ஹாய் சொல்ல தொடங்கியிருக்கிறார். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பழகியிருக்கிறார். ஒரு நாள் உங்கள் பெயர் என ஹிலாரி விசாரித்திருக்கிறார், அதற்கு அந்தப் பெண் "டான் ஜான்சன்" என கூறியிருக்கிறார். உடனடியாக கணவனிடம் சென்ற ஹிலாரி "இவள் நி்ச்சயமாக என் அக்காதான்" என கூறியிருக்கிறார்.

இதனையடுத்து விஷயத்தை நேரடியாக கேட்டுவிடும் முடிவுடன் ஹிலாரியும் கணவரும் பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது ஹிலாரியும், அந்தப் பெண்ணும் தனிமையில் பேசத் தொடங்கியுள்ளனர். அப்போது, ஹிலாரி அந்தப் பெண்ணிடம் உங்கள் தந்தையின் பெயர் என்ன என கேட்டுள்ளார். அதற்கு அளித்த பதில் ஹிலாரிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, தாயின் பெயரும் கேட்டுள்ளார். அப்போது "ஓ" என்று கத்தியப்படி டானை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து "என்னை நினைவிருக்கிறதா உனக்கு? 18 வயது இருக்கும்போது வேறொருவருக்கு தத்துக்கொடுத்த தங்கை நான்தான்" என தெரிவித்துள்ளார்.

இதை சற்றும் எதிர்பாராத டான் ஜான்சன்ஸ் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்று "என் வாழ்வில் எதிர்பாராத சந்திப்பு இது. இந்த பந்தம் எப்போதும் தொடரரும்" என கூறியுள்ளார். இந்த அற்புதமான தேடுதலையும் பாசப் போராட்டத்தையும் அமெரிக்காவின் பிரபல பத்திரிகைகளை அனைத்தும் உணர்ச்சிப் பொங்க எழுதி வருகின்றனர் 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close