[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா

இன்று முதல் சவுதியில் பெண்கள் கார் ஓட்டலாம்

saudi-women-driving-ban-ends

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதால் அந்நாட்டு பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகம் செய்து வருகிறார். சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு போட்டிகளை பெண்கள் நேரில் சென்று பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது கார் ஓட்ட அனுமதி வழங்கியுள்ளது. சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இன்று முதல் பெண்கள் கார் ஓட்டத் தொடங்கியுள்ளனர். பெண்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும் வகையில் கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close