[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

அகச்சிவப்பு கதிர் கேமராவில் சிக்கிய பனி சிறுத்தைகள்

rare-footage-captured-of-endangered-snow-leopards-in-china

சீனாவில் கண்காணிப்பு கேமராவில் சிக்கிய பனி சிறுத்தையின் காட்சிகள்  வெளியிடப்பட்டுள்ளது.

கன்சூ மாகாணத்தில் உள்ள கிலியான் சரணாலயத்தில் சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக அகச்சிவப்பு கதிர் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், அந்த கேமராவில் பனி சிறுத்தைகள் இணை சேர்ந்த காட்சிகள் பதிவாகி இருந்தன. அதனை விலங்கியல் ஆர்வலர்கள் தற்போது முதல் முறையாக வெளியிட்டுள்ளனர். இந்தக் காட்சி சீனாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் காணக் கிடைக்காத ஒன்று என அந்த சரணலாயத்தின் தலைவரான மா துயிஃபாங் தெரிவித்துள்ளார்.

இந்தக் காணொலி பனிச் சிறுத்தைகளின் குணாதிசயங்களை அறிந்து கொள்ள உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலில் பனிச் சிறுத்தைகளும் இருப்பதால், அதனை பாதுகாக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுவாக இந்த வகை சிறுத்தைகள் மலைப் பாங்கான பகுதிகளில் தான் வசிக்கும். இவற்றில் 60 சதவிகித சிறுத்தைகள் சீனாவில் மட்டுமே வசிப்பதாக கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close