[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச நவ.29 இந்தியா வருகை
  • BREAKING-NEWS ரஜினி, கமல், விஜய் சேர்த்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS அவசியம் ஏற்பட்டால் நானும், ரஜினியும் இணைவோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

இந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி

pm-modi-widodo-inaugurate-kite-exhibition-themed-on-indian-epics

இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவுடன் இந்திய பிரதமர் மோடி பட்டம் விட்டு விளையாடினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். இதில் முதலில் அவர் சென்றுள்ள நாடு இந்தோனேசியா. அங்கு சென்ற மோடிக்கு அந்நாட்டு அதிபர் ஜோகோ உற்சாக வரவேற்பு அளித்தார். இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இருநாடுகளுக்கு இடையேயான தொழில்நுட்ப வளர்ச்சி, விண்வெளி ஆராய்ச்சி, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

பின்னர் பேசிய மோடி, தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக இந்தோனேசியாவிற்கு துணையாக இந்தியா இருக்கும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஜகர்த்தாவில் நடைபெற்ற பட்டம் விடும் கண்காட்சியின் தொடக்கவிழாவிற்கு, ஜோகோவுடன் மோடியும் சென்றார். அங்கு ஜோகோவுடன் இணைந்து மோடியும் பட்டம் விட்டு விளையாடினார். இதனை அங்கு கூடியிருந்தவர்கள் கண்டுகளித்தனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : PM ModiModi KiteKite ExhibitionIndonesiaJoko Widodo
Advertisement:
Advertisement:
[X] Close