[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

நிலவில் காலடி வைத்த ஆலன் பீன் மரணம்

alan-bean-apollo-astronaut-and-fourth-person-to-walk-on-the-moon-died-at-86

முன்னாள் அமெரிக்க விண்வெளி வீரரும், நிலவில் காலடி வைத்த நான்காவது நபருமான ஆலன் பீன் உயிரிழந்தார்.

அமெரிக்காவின் முன்னாள் விண்வெளி வீரர் ஆலப் பீன் (86). கடந்த சில வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர், ஹூஸ்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அமெரிக்க கப்பற்படை கேப்டனாக  வாழ்க்கையை தொடங்கிய ஆலன் பீன் சிறந்த ஓவியராகவும் திகழ்ந்தார். 1969ஆம் ஆண்டு ஆலன் பீன் நிலவுக்குச் சென்றார். பொறியாளர், விண்வெளி வீரர், ஓவியர் எனப் பன்முகம் கொண்ட அவரது இழப்பை ஈடு செய்யமுடியாது என நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆலன் பீன் தனது வாழ்வின் பிற்பகுதியில் விண்வெளியில் தாம் சென்ற அனுபவத்தை ஓவியங்களாக படைத்துள்ளார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close