[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

கோலாகலமாக நடைபெற்றது பிரிட்டன் இளவரசர் திருமணம்

prince-harry-meghan-markle-wedding

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதனை லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

பிரிட்டன் இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்க நடிகை மேகன் மார்க்லேவுக்கும் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதையொட்டி உலகம் முழுவதும் இருந்து இளவரசரின் அபிமானிகள், ஆதரவாளர்கள் உள்பட லட்சக்கணக்கானோர் திருமணத்தை கண்டுகளித்தனர். வின்ட்சர் மாளிகையில் நடைபெற்ற இந்தத் திருமண விழாவில் டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் வாழ்த்து பாடல் பாடினர்.

மேகன் மார்க்லே ஆப்பிரிக்க அமெரிக்க கலப்பின பெண் ஆவார். இதுநாள் வரை வெள்ளையினத்தை சேர்ந்தவர்களே பிரிட்டன் அரசக் குடும்பத்தை அலங்கரித்து வந்த நிலையில் கருப்பின பெண் ஒருவர் இளவரசியாக பிரிட்டன் அரண்மனைக்குள் தற்போது நுழைந்துள்ளார். இதனை கருப்பின மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். பொதுவாகவே எத்தனையோ பிரபலங்களின் திருமணங்கள் நடைபெற்றாலும் பிரிட்டன் இளவரசரின் திருமணத்தை மக்கள் அதிக மகிழ்சியுடனே கண்டுகளிக்கின்றனர். அந்த வகையில் லட்சக்கணக்கான மக்கள் இளவரசர் ஹாரியின் திருமணத்தை நேரிலும், இணையதளங்கள் வாயிலாகவும் கண்டுகளித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close