கியூபாவில் விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கியூபா தலைநகர் ஹவானாவிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட விமானம் சற்று நேரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியது, பிறகு அந்த விமானம் தீப்பற்றி எரிந்தது. விமான நிலையத்திலிருந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் விமானத்தில் இருந்த பயணிகள் தீயில் கருகி உயிரிழந்தனர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்ட கியூபா அதிபர் மிகுல் டயஸ்கேனல் விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார். கியூப அரசு நிறுவனத்திற்கு சொந்தமான அவ்விமானத்தில் 104 பயணிகளும் பைலட் உள்ளிட்ட 9 சிப்பந்திகளும் இருந்ததாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களில் ஒரு சிலர் மட்டுமே படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் மற்றவர்கள் இறந்து விட்டதாகவும் அவர்கள் கூறினர்.
நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்!
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்
"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்" ப.சிதம்பரம் சாடல்
கருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு
போக்குவரத்து விதிமீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்!