[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தஞ்சையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சிய
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

தென்கொரியாவுக்கு ‘நோ’  ;அமெரிக்காவுக்கு எச்சரிக்கை: வடகொரியா அதிரடி

north-korea-threatens-to-cancel-trump-summit

அணு ஆயுத திட்டங்களை முழுமையாக கைவிட வேண்டும் என வற்புறுத்தினால், அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்து விடுவோம் என வடகொரியா எச்சரித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே வரும் ஜூன் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது உலக அமைதியை நிலைநாட்டும் வகையில் கிம் ஜாங் உன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார். மேலும் பேச்சுவார்த்தைக்காக தனது நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனை கூடத்தையும் மூடப் போவதாக வடகொரியா தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா திடீரென போர் ஒத்திகையில் ஈடுபட்டதால் வடகொரியா மிகுந்த ஆவேசம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தென்கொரியாவுடனான பேச்சுவார்த்தையையும் அதிரடியாக நிறுத்திக் கொண்டது. வடகொரியாவை ஆக்கிரமிக்கும் வகையில் இந்தப் போர் ஒத்திகை நடத்தப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுப்பியுள்ள அந்நாட்டு அதிகாரிகள், அணு ஆயுத திட்டங்களை முழுமையாக கைவிட வேண்டும் என வடகொரியாவை வற்புறுத்தக் கூடாது என தெரிவித்துள்ளனர். மேலும், அவ்வாறு வற்புறுத்தினால் அமெரிக்க அதிபர் ட்ரம்புடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்யவும் தயங்கமாட்டோம் என எச்சரித்துள்ளனர். இதனால் வடகொரியா விவகாரத்தில் மீண்டும் பிரச்னை எழுந்துள்ளது.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close