[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆதார் அடையாள அட்டை செல்லும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு

கை இழந்த காதலியை கைவிடாத காதலன் !

couple-marries-just-days-after-crocodile-ripped-the-bride-s-arm-off-in-a-horrific-attack

ஜிம்பாப்வேயில் உள்ள விக்டோரியா அருவிக்கு ஒரு காதல் ஜோடி சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். திருமணம் நிச்சயமான நிலையில் இருவரும் தனிமையில் பொழுதை கழிப்பதற்காக சென்றுள்ளனர். சுற்றுலா வழிகாட்டியான ஜானேலும் அவர் காதலி ஜேமியும் அங்குள்ள ஏரியின் அழகை படகில் பயணித்தவாறே ரசித்து சென்றுள்ளனர். அப்போது ஏரியில் இருந்த முதலை ஒன்று தண்ணீரில் இருந்து தாவி  ஜேமியின் கையை கடித்து விட்டது. இதில் அவரது கை துண்டிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் நடைப்பெற்று ஐந்து நாட்களுக்கு பிறகு இருவரும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். இதுகுறித்து ஜேமி கூறுகையில். நாங்கள் எங்கள் திருமணத்தை எப்படியெல்லாம் நடத்த வேண்டும் என திட்டமிட்டோம்.ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து திருமணம் நடந்துள்ளது. நாங்கள் படகில் சென்றுக்கொண்டிருந்த போது சுற்றுலா வழிகாட்டி ஏரியில் முதலை இருப்பதாக தெரிவித்தார். இரு முதலைகள் தலையை தூக்கியவாறு இருந்தது. அது தாக்கும் என்பதை அவர்கள் கூறவில்லை.

நான் அது முதலை தானா என பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது தண்ணீரில் இருந்து ஒரு முதலை தாவி என் கையை கடித்து விட்டது.படகு நிலை தடுமாறியதில் நாங்கள் தண்ணீரில் விழுந்துவிட்டோம். நான் ஒருபுறமும் ஜானேலும் சுற்றுலா வழிகாட்டியும் மற்றோரு புறமும் நீரில் இருந்தோம். எங்களுக்கு இடையில் படகு இருந்தது. அவரகள் இருவரும் முதலையிடம் சண்டையிட்டு என்னை மீட்டனர் என அந்த நிமிடங்களை அப்படியே விவரிக்கிறார்.

இதுகுறித்து  ஜானல் கூறுகையில், இந்த சம்பவத்திற்கு பிறகு எங்களுக்கு இடையேயான காதல் அதிகரித்துள்ளது.  நாங்கள் எங்களை ஒருவருக்கொருவர் நன்றாக புரித்துக்கொண்டிருக்கிறோம் என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close