[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

சவுதியில் சாலை விபத்து: பிரிட்டன் புனித பயணிகள் 4 பேர் பலி

4-british-pilgrims-killed-in-saudi-arabia-crash

சவுதி அரேபியாவில் பஸ்சும் டேங்கர் லாரியும் மோதிய விபத்தில் இங்கிலாந்தை சேர்ந்த 4 பேர் பலியாயினர்.

சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 18 பேர் மெக்கா செல்ல, சவுதி அரேபியா வந்தனர். ஹாசிம் டிராவல்ஸ் என்ற பிரிட்டீஷ் டிராவல் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. 

சவுதி வந்த அவர்கள் ஒரு பஸ்சில் மெக்காவுக்கு சனிக்கிழமை புறப்பட்டு சென்றனர். மெக்காவில் இருந்து 30 மைல் தூரத் துக்கு முன், அல் கலாஸ் என்ற பகுதி அருகே பஸ் சென்றுகொண்டிருந்த போது, கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்றின் மீது மோதியது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 12 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில்
பலர் நிலமை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதை இங்கிலாந்துக்கான சவுதி அரேபிய தூதரும் உறுதிப்படுத்தி உள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close