[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

குரங்குகளுக்கு ஸ்கூல் நடத்தும் தாத்தா!

serious-monkey-business-at-malaysia-school-for-macaques

தேங்காய் மற்றும் பழங்களை பறிப்பதற்கு குரங்குகளுக்குப் பயிற்சி அளிக்கும் ஸ்கூல் ஒன்றை நடத்துக்கிறார் தாத்தா ஒருவர்!

மலேசியாவில் உள்ளது கெலந்தன் மாநிலம். இங்குள்ள படாங் கல்பான் பகுதியை சேர்ந்தவர், தாத்தா, வான் (Grandfather Wan). கடந்த நாற்பது வருடங்களாக குரங்குகளுக்கு பழங்கள் மற்றும் தேங்காய்களை பறிக்கும் பயிற்சிகளை வழங்கி வருகிறார், இந்த 63 வயது தாத்தா! மற்ற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இவரிடம் குரங்களைப் பயிற்சிக்கு அனுப்ப, பெரும் ஸ்கூ லாகவே நடத்தி வருகிறார் இதை!

‘எனக்கு 20 வயசா இருக்கும்போது, விளையாட்டா ஒரு குரங்கை பழக்கினேன். அது, நான் சொன்னதை கேட்டுச்சு. அதை வச்சு தேங்காய்களை பறிச்சேன். நல்ல வரவேற்பு கிடைச்சது. இதுக்குப் பிறகு மற்றக் குரங்குகளுக்கு பயிற்சி அளிக்க ஆரம்பிச்சேன்’ என்கிறார் தாத்தா! இந்தப் பயிற்சிகளுக்காக சிறு தொகையை மட்டுமே வாங்குவதாகச் சொல்லும் இவர், இந்த குரங்குகளை தனது பிள்ளைகள் போல பார்க்கிறேன் என்கிறார்.

‘இதெல்லாம் என் குழந்தைகள் மாதிரிதான். குரங்குகள் பழங்களை பறிச்சா, நாம் அதன் மீது அன்பை காட்டணும். அதைக் கல்லால் அடிக்கக் கூடாது. குரங்குகளுக்கு ஒவ்வொரு கட்டமா பயிற்சி அளிக்கிறேன். ஒரே நாளில் எல்லாவற்றையும் கற்றுவிடாது. நல்லா பயிற்சிப் பெற்ற குரங்கு, ஒரு நாளுக்கு 800 தேங்காய்களை பறிக்கும். அதற்கு 150 வெள்ளி ஊதியம் கொடுக்கப்படுது’ என்கிறார் தாத்தா.

குரங்குகள் துன்புறுத்தப்படுகின்றன என்கிற குரல்களும் எழத்தான் செய்கின்றன. இதுபற்றி கேட்டால், ‘நான் என்ன செய்கிறேன், எப்படி பயிற்சி அளிக்கிறேன் என்பதை இங்கே வந்து பார்த்துக்கொள்ளட்டும்’ என்கிறார் இந்த கில்லாடி தாத்தா!

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close