[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

வெனிசுலா சிறையில் கலவரம்: 68 கைதிகள் பலி!

68-dead-in-blaze-after-venezuela-jail

வெனிசுலா நாட்டில் உள்ள சிறையில் நடந்த கலவரத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 68 கைதிகள் பலியாகியுள்ளனர்.

வெனிசுலா நாட்டில் வாலன்சியா நகரில் சிறை ஒன்று உள்ளது. ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று கைதிகளுக்குள் கலவரம் ஏற்பட்டது. இதன் காரணமாக சிறைக்குள் தீ விபத்து ஏற்பட்டது. சிறையில் இருந்து தப்பிப்பதற்காக தலயணை உள்ளிட்ட பொருட்களை வைத்து கலவரக்காரர்கள் தீ வைத்துள்ளனர். இது பயங்கரமாக எரிந்து தீ அக்கம் பக்கத்துக்கும் பரவியது. இதையடுத்து கைதிகள் அலறியடித்து ஓடினார். தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.

அதற்குள் கைதிகளின் உறவினர்கள் சிறைக்கு வெளியே கூடி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறைக்குள் நடந்த உண்மையான சம்பவங்களையும் பாதிப்புகளையும் வெளியிடுமாறு அவர்கள் கோஷமிட்டனர். போலீசார் அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.

இந்நிலையில் அட்டர்னி ஜெனரல் வில்லியம் சாப், சிறைக்குள் நடந்த தீ விபத்தில் 68 பேர் இறந்துவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து விசாரிக்க குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  இதையடுத்து கைதிகளின் உறவினர்கள் சிறைக்கு வெளியே கண்ணீருடன் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close