[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

என்னை கைது செய்வதால் பணம் கிடைக்காது: விஜய் மல்லையா

i-am-in-forced-exile-no-plans-to-return-to-india-mallya

தொழில் அதிபர் விஜய் மல்லையா தான் கடன் கொடுத்த வங்கிகளுடன் நியாயமான தீர்வை விரும்புவதாகும், தன்னை கைது செய்வதினால் அவர்கள் பணத்தை திரும்ப பெற முடியாது என கூறியுள்ளார்.

மேலும், தான் இந்தியாவை விட்டு கட்டாயத்தினால் தான் வெளியேறி இருப்பதாகவும், இந்தியாவிற்கு திரும்பும் திட்டம் கிடையாது என்று கூறி உள்ளார். இதுக்குறித்து விளக்கம் அளித்த அவர், இந்தியாவில் தற்போது சூழ்நிலை சரியாக இல்லை என்றும் தனக்கு எதிரான செயல்கள் வேகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்

பிரபல தொழில் அதிபரும், மாநிலங்கவை உறுப்பினருமான விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிசெலுத்தவில்லை. அதன் பிறகு இங்கிலாந்து சென்றார். விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய் மல்லையாவுக்கு அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனால் அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் கோரிக்கையை ஏற்று, வெளியுறவுத்துறை அமைச்சகம் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கியது.

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் எனவும் இங்கிலாந்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று முறைப்படி வேண்டுகோள் விடுத்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close