[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

என்ன நடக்கப்போகுதோ? கிம் ஜாங் உன்னை சந்திக்கும் ட்ரம்ப்!

kim-jong-un-to-meet-trump-by-may-after-north-korea-invitation

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை நேரில் சந்திக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.

கடந்த வாரம் பியாங்யாங்கில் கிம் ஜாங் உன் உடன் பேச்சுவார்த்தை நடத்திய தென்கொரியாவின் பாதுகாப்பு அதிகாரி சங் உய் யங் தலைமையிலான சிறப்பு பிரதிநிதிகள் குழு அமெரிக்கா சென்றது. இந்தப் பயணத்தின் போது வடகொரிய அதிபர் கிம் உடனான பேச்சுவார்த்தையின் சாராம்சம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கொரிய தீபகற்பத்தில் வடகொரிய அதிபர் கிம் அணு ஆயுத நீக்கம் செய்ய ஒப்புக்கொண்டார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எடுத்துரைக்கப்பட்டது. 

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், ட்ரம்பை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய தென்கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சங் உய் யங், வரும் மே மாதத்தில் ட்ரம்ப் வடகொரிய அதிபரை நேரில் சந்திக்க இருப்பதாக தெரிவித்தார். இருப்பினும் உலக நாடுகள் பலவும் இந்தச் சந்திப்பை முக்கியவத்துவம் வாய்ந்ததாக எதிர்நோக்கியுள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close