[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன?; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி
  • BREAKING-NEWS சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு
  • BREAKING-NEWS கர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கேரள மாநிலம் சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரிந்தது; ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வரை தொடர்புபடுத்தி குற்றஞ்சாட்டியுள்ளார்கள்; எஞ்சியுள்ள தடயங்களை அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது - மு.க.ஸ்டாலின்

புலியை பிடிக்கப் போய் பொம்மையை பிடித்த போலீஸ்

45-minute-farm-standoff-ends-when-cops-realize-tiger-is-stuffed

 

புலியை பிடிக்கப் போன காவல்துறையினர் இறுதியில் பொம்மையை பிடித்த காமெடி சம்பவம் ஒன்று ஸ்காட்லாந்தில் நடந்துள்ளது.


ஸ்காட்லாந்தின் வட கிழக்கு போலீஸ் பிரிவினர் வழக்கம் போல் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசியவர் சற்று படபடப்புடன் தனது பண்னையில் ஒரு பெரிய புலி பதுங்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் ஒரு பெரிய படையோடு சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். 3 மோப்ப நாய்களையும் அழைத்துச் சென்றுள்ளனர். அவரது தோட்டத்தில் மாடுகள் இருந்ததால் புலி அவற்றை தாக்கக்கூடும் என்ற அச்சத்தில் விரைவாக அவரது தோட்டத்திற்கு வந்துள்ளனர். அங்கு வந்து காவலர்கள், புலி இருந்த இடத்தை நோக்கி டார்ச் அடித்து பார்த்துள்ளனர். புலி அங்கு தரையில் படுத்து இருப்பது தெரியவந்தது. ஆனால் எந்த அசைவும் இல்லாமல் புலி ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தது. இதனையடுத்து சந்தேகமடைந்த காவலர்கள் அருகில் சென்று பார்த்ததில் புலி இல்லை, அது பொம்மை என்பது தெரியவந்துள்ளது.  
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close