[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.

மாலத்தீவில் அடுத்தடுத்து பரபரப்பு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கைது

maldives-chief-justice-supreme-court-judge-arrested

மாலத்தீவில் அதிபர் அப்துல்லா யாமீன் நெருக்கடி நிலையை பிறப்பித்துள்ள நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா சையிதும், நீதிபதி அலி அஹமத்தும் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். 

மாலத்தீவு அதிபர் யாமீன் அப்துல் கயூமுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 9 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் உள்நோக்கம் இருப்பதாக கூறி உச்சநீதிமன்றம் அவர்களை விடுவிக்க கடந்த வாரம் உத்தரவிட்டது. மேலும், அதிபர் யாமீனின் கட்சியிலிருந்து விலகிய 12 எம்பிக்களின் தகுதி நீக்கம் செல்லாது எனவும் தீர்ப்பளித்தது. இந்நிலையில் அதிபர் யாமீன் பதவி விலகும் நிலை ஏற்பட்டது. 

இந்நிலையில் நாடாளுமன்றத்தைக் காலவரையின்றி முடக்குவதாக மாலத்தீவு அரசு அறிவித்தது. மேலும் 2 எம்.பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல நாடுகள், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணங்கும்படி யாமீனை வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில், அங்கு நிலவும் அசாதாரண சூழலால், 15 நாள்களுக்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக அதிபர் யாமீன் அப்துல் கயூம் அறிவித்துள்ளார். மாலத்தீவில் குழப்பம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் மாமூன் அப்துல் யகயூமும் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் மாலத்தீவிற்கு செல்லத்திட்டமிட்டிருக்கும் இந்தியர்கள் பயணத்தை ஒத்திவைக்குமாறு வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா சையிதும், நீதிபதி அலி அஹமத்தும் நீதிமன்ற வளாகத்திலேயே இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். ஊழல் புகார்கள் அடிப்படையில் அவர்கள் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு விளக்கமளித்துள்ளது. மாலத்தீவின் உச்ச நீதிமன்ற வளாகத்திலும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்களை கைது செய்யும் பணியில் ராணுவம் இறங்கியுள்ளது.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close