[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்
  • BREAKING-NEWS கரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்
  • BREAKING-NEWS ஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு
  • BREAKING-NEWS திரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்

சவுதி அரேபியாவில் முதன் முறையாக கால்பந்துபோட்டியை ரசித்த பெண்கள்!

saudi-football-stadium-welcomes-women-for-first-time

சவுதி அரேபியாவில் கால்பந்துபோட்டியை பார்த்து ரசிக்க, முதன் முறையாக பெண்கள் மைதானத்துக்குள் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.

சவுதி அரேபியாவில் மன்னராட்சி நடந்து வருகிறது. அங்கு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய பட்டத்து இளவரசாகப் பொறுப்பேற்றுள்ள முகமது பின் சல்மான் அங்கு சீர்த்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சவுதியில் சினிமா தியேட்டர் திறக்கவும் பெண்கள் கார் ஓட்டவும் விளையாட்டுகளை மைதானத்துக்குச் சென்று பார்க்கவும் அனுமதியளித்துள்ளார். 
இதையடுத்து ஜெட்டா நகரில் அல் -அஹி மற்றும் அல் - படின் அணிகளுக்கு இடையேயான லீக் கால்பந்து போட்டியை பார்க்க பெண்கள் நேற்று அனுமதிக்கப்பட்டனர். மைதானத்தில் அவர்களுக்காக அமைக்கப்பட்ட  கேலரியில் குடும்பத்துடன் அமர்ந்து போட்டியை உற்சாக ரசித்தனர்.

இதுபற்றி போட்டியை காண வந்த, லம்யா கலீத் நாசர் என்ற 32 வயது கால்பந்து ரசிகை கூறும்போது, ‘இந்த நிகழ்வு வளமான எதிர்காலத்துக்கான மாற்றமாக இருக்கிறது. இந்த மாற்றத்தின் சாட்சியாக இருக்கும் நான், பெருமையடைகிறேன்’ என்றார்.

ஜெட்டாவைச் சேர்ந்த ருவேய்டா அலி கசாம் என்பவர் கூறும்போது, ‘சவுதியின் வரலாற்று முக்கியத்துவமான நாள் இன்று. மற்ற நாடுகளை போல பெண்களுக்கு அளிக்கப்படும் இந்த மாற்றங்கள் பெருமையாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். 


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close