[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு
  • BREAKING-NEWS யோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி
  • BREAKING-NEWS வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS யோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்

பாக் சிறுமி பாலியல் வன்கொடுமை: தன் குழந்தையுடன் நியாயம் கேட்ட செய்தி வாசிப்பாளர்

zainab-murder-heart-melting-words-by-samaa-anchor

பாகிஸ்தானில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை ஒரு தாயாக தான் எப்படி உணர்கிறேன் என அங்குள்ள தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண் செய்திவாசிப்பாளர் ஒருவர் தனது குழந்தையுடன் விவரிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்படுகிறது.


பாகிஸ்தானின் கசூர் பகுதியை சேர்ந்த  7வயது சிறுமி ஷாயினப் (Zainab).இந்த சிறுமி கடந்த செவ்வாய்கிழமை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.அந்த பகுதியில் உள்ள சிடிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுமி ஒரு நடுத்தர வயதுமிக்க நபருடன் செல்வது தெரியவந்துள்ளது. சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தையடுத்து சிறுமியின் உயிரிழப்புக்கு நியாயம் கேட்டும் குற்றவாளியை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பாகிஸ்தானில் உள்ள ஒரு செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் தனது குழந்தையுடன் இதனை தான் எப்படி உணர்கிறேன் என்பதை கூறுகிறார். ஸ்டூடியோவுக்கு தனது குழந்தையுடன் வந்த செய்தி வாசிப்பாளர் அரங்கில் குழந்தையை தனது அரவணைப்பில் வைத்து தன் வேதனையையும் தாயாக தான் உணரும் வலியையும் பதிவு செய்துள்ளார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close