[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

பாகிஸ்தானுக்கு நிதி உதவிகளையும் நிறுத்தியது அமெரிக்கா

donald-trump-administration-suspends-all-aid-to-pakistan

பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த பாதுகாப்பு நிதி உதவிகளையும் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிறுத்தியுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு முதல் தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆண்டுதோறும் அமெரிக்கா நிதியுதவி வழங்கி வருகிறது. இதுவரை பல லட்சம் கோடி ரூபாய் வழங்கி உள்ளது. ஆனால் தீவிரவாத அமைப்புகளை ஒழிப்பதில் பாகிஸ்தான் தீவிரமாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

இதையடுத்து, தீவிரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் பொய்களை மட்டுமே கூறிவருகிறது என்று அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் கடுமையாக சாடினார். அமெரிக்காவை ஏமாற்றி வரும் பாகிஸ்தானின் நடவடிக்கைகளை இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த அனைத்து நிதி உதவிகளையும் அமெரிக்க அதிபர் ட்டிரம்ப் அரசு நிறுத்தியுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் அரசு சுமார் 1150 கோடி டாலர் நிதியுதவியை இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்நாட்டின் அரசு துறை செய்தி தொடர்பாளர் ஹெதர் நாவுர்ட் கூறுகையில், “பாகிஸ்தானுக்கு மட்டுமான பாதுகாப்பு உதவிகளை ரத்து செய்கிறோம். தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு எடுக்கும் வரை அந்நாட்டை நிலைத்தன்மையற்ற நாடாகவே கருதுவோம்” என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close