[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

இந்தியா கண்டனம் எதிரொலி: பாகிஸ்தானுக்காக பாலஸ்தீன தூதர் திரும்ப அழைப்பு

india-palestine-solidarity-front-demands-sacking-of-palestinian

மும்பை பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையத் நடத்திய கூட்டத்தில் பாகிஸ்தானுக்கான பாலஸ்தீன தூதர் பங்கேற்றதுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அவரை பாலஸ்தீனம் திரும்ப அழைத்துக்கொண்டது.

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரணி ஒன்றில் ஹபீஸ் சையதுடன் பாலஸ்தீன தூதர் கலந்துகொண்டார். இந்தப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனைத்தொடர்ந்து இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதர் அட்னான் அபு அல் ஹைஜாவை அழைத்து இந்தியா  கண்டனத்தைத் தெரிவித்தது. 

இந்த சம்பவத்திற்காக பாலஸ்தீனம் வருத்தம் தெரிவித்ததாகவும்.  பாலஸ்தீன தூதரான வாலிட் அபு அலியை திரும்பப் பெறவுள்ளதாக பாலஸ்தீனம் உறுதியளித்ததாகவும் அதிகாரிகள் தெவித்தனர். இந்தத் தகவலை இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதரும் உறுதி செய்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அட்னான் அபு அல் ஹைஜா, பாகிஸ்தானில் எங்கள் தூதர் நடந்து கொண்ட விதத்தை ஏற்க முடியாது. அவர் இனி பாகிஸ்தானில் பாலஸ்தீன தூதராக இருக்க மாட்டார். இந்தியாவுடனான உறவுகள் எங்களுக்கு மிகவும் முக்கியம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பாலஸ்தீனம் இந்தியாவுடன் இணைந்து நிற்கிறது என தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close