[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள ஊதியத்தை பெறப்போவதில்லை- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: பாம்பன் அருகே சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு டீசல் விலை உயர்வை காரணம் காட்டுவதை ஏற்க முடியாது- வைகோ
  • BREAKING-NEWS பேருந்து கண்டன உயர்வை கண்டித்து தமிழகத்தில் ஜன.24இல் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக ஜன.27 இல் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து ஜன.24 ஆம் தேதி பாஜக போராட்டம் நடத்தும்-தமிழிசை
  • BREAKING-NEWS ஜன. 12 இல் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு நாளை மறுநாள் நடைபெறும்
உலகம் 22 Dec, 2017 09:59 PM

கலைக்கட்டுகிறது மலேசியா கிறிஸ்துமஸ்

christmas-celebration-in-malaysia

பல்வேறு சமயங்கள், கலாச்சாரங்களுக்கு புகழ்பெற்ற மலேசியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உற்சாகமாக தொடங்கி விட்டது.

மலேசியாவில் தேசிய பொது விடுமுறையாக அறிவிக்கப்படும் பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் விழாவும் ஒன்றாகும். அந்த வகையில், மற்ற பண்டிகைகளின் போது, பொது இடங்களில் அலங்கார அமைப்புகள் வைக்கப்படுவது போல கிறிஸ்துமஸ் தினத்தையும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் கோலாலம்பூரில் உள்ள பிரபல பேரங்காடிகள் அலங்காரங்களினால் ஜொலிக்க தொடங்கி விட்டன.

உலகிலேயே மிக பெரிய பேரங்காடிகள் பட்டியலில் முதல் 10 இடத்தில் மலேசியாவைச் சேர்ந்த 3 பேரங்காடிகள் இடம்பெற்றுள்ள நிலையில், மலேசியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் பேரங்காடி இடங்களில் அமைந்துள்ள அலங்கார அமைப்புகளைக் காண உற்சாகம் காட்டி வருகின்றனர். கிறிஸ்துமஸ் தினம், வருட இறுதியில் பள்ளி விடுமுறை காலத்தில் கொண்டாடப்படுவதால் பெரியவர்களோடு சிறுவர்களும் பெருமளவில் பேரங்காடியில் திரண்டுள்ளனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close