[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

ஹிலாரி கிளிண்டன் படத்தை பச்சை குத்திய நடிகர்

hillary-clinton-image-put-tattoo-in-hand

அமெரிக்க நடிகர் பீட் டேவிட்சன், தனது கையில் அதிபர் தேர்தலில் நின்ற ஹிலாரி கிளிண்டனின் புகைப்படத்தை பச்சை குத்தி உள்ளார்.

அமெரிக்காவில் மிகவும் புகழ்பெற்ற நடிகராக இருப்பவர் பீட் டேவிட்சன். இவர் தனது கையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் நின்ற புகழ்பெற்ற பெண்மணியான ஹிலாரி கிளிண்டனின் புகைப்படத்தை கையில் டாட்டூ குத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டிசம்பர் 16 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகளவில் பரவி வருகிறது. ஹிலாரி கிளிண்டனின் இளமை தோற்ற புகைப்படத்தை தனது கையில் பச்சைக் குத்திக் கொண்ட டேவிட்சன், அத்துடன் ஒரு சிறப்பு செய்தியை அவருக்கு கிறிஸ்துமஸ் பரிசாக அளித்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், கிறிஸ்துமஸ் பரிசாக தனது ஹீரோவான ஹிலாரி கிளிண்டனின் புகைப்படத்தை டாட்டூ குத்தி உள்ளதாகவும், உலகத்திலேயே மிகச்சிறந்த தைரியமான மனிதராக இருப்பதற்கு நன்றி என்றும், அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவைக் கண்ட ஹிலாரி மிகவும் நெகிழ்ச்சியுடன் டேவிட்சனுக்கு நன்றி கூறி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், அரசியலைத் தாண்டி மக்களின் மனதில் ஹிலாரி கிளிண்டனின் உயரமான இடத்தை பெற்றுள்ளதாக அமெரிக்க மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close