[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 62ஆவது படத்தின் பூஜை நாளை நடைபெறுகிறது
 • BREAKING-NEWS நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல; மோடிக்கு எதிரானவன்: பிரகாஷ் ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி இருந்திருக்க வேண்டும் - சீமான்
 • BREAKING-NEWS வைரமுத்துவை காரணம் காட்டி தமிழகத்திற்குள் கொல்லைப்புறமாக வர நினைத்தால் வர முடியாது - பாரதிராஜா
 • BREAKING-NEWS ஹெச். ராஜாவும், தமிழிசையும் இணைந்து மெர்சல் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டனர்- நடிகர் விஷால்
 • BREAKING-NEWS நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் சர்ச்சை தேவையற்றது- ஓ. பன்னீர் செல்வம்
 • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
 • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
உலகம் 17 Dec, 2017 12:43 PM

இஸ்ரேல் அழகியுடன் செல்ஃபி எடுப்பதா? நாட்டை விட்டு வெளியேறியது மிஸ்.ஈராக் குடும்பம்!

iraqi-beauty-queen-takes-selfie-with-miss-israel-family-forced-to-flee-country

உலக பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்துகொண்ட மிஸ்.ஈராக்குக்கு வந்த கொலை மிரட்டலை அடுத்து அவர்கள் குடும்பம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் சமீபத்தில் உலக பிரபஞ்ச அழகிப் போட்டி நடந்தது. இதில் தென்னப்பிரிக்காவின்  டெமி லெ நெல் பீட்டர்ஸ் அழகியாக தேர்வானார். இதற்கான போட்டியில் ஈராக் அழகியும் மாடலுமான சாரா இடானும் கலந்துகொண்டார். இஸ்ரேல் நாட்டில் இருந்து அடார் கேண்டல்ஸ்மேன் கலந்துகொண்டார். இருவரும் போட்டி நடக்கும் இடத்தில் தோழியானார்கள். இதையடுத்து செல்ஃபி எடுத்துக்கொண்ட இவர்கள், அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தனர்.

அதில், ’மிஸ் ஈராக் மற்றும் மிஸ் இஸ்ரேலிடம் இருந்து அன்பும் அமைதியும்’ என்று கேப்சன் எழுதியிருந்தனர். நீச்சல் உடையில் தான் இருந்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார் ஈராக்கின் சாரா. இதற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கொலை மிரட்டல் வந்ததை அடுத்து சாராவின் குடும்பம் அந்நாட்டில் இருந்து வெளியேறியுள்ளது. இதை இஸ்ரேல் அழகியும் உறுதிபடுத்தியுள்ளார்.

‘நான் அவருடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன். பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பிரச்னை அடங்கிய பிறகு நாடு திரும்புவார்’ என்று கூறியுள்ளார் இஸ்ரேலின் கேண்டல்ஸ்மேன்.

சாரா டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ’இது போன்ற பிரச்னையை எதிர்கொள்ளும் முதல் பெண் அல்ல நான். மில்லியன் கணக்கிலான ஈராக் பெண்கள் இப்படி பயத்தில்தான் வாழ்ந்துவருகின்றனர்’ என்று தெரிவித்துள்ளார். 

பாலஸ்தீனிய பிரச்னையில் ஈரான் மக்கள் இஸ்ரேலை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் இந்த செல்ஃபி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close