[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

கெப்ளர்90 குடும்பத்தில் பூமியை போன்ற புதிய கோள் கண்டுபிடிப்பு

eighth-planet-found-in-faraway-solar-system-keplar90-matching-earth

கெப்ளர்90 நட்சத்திர குடும்பத்தில் பூமியை போன்ற புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

சூரிய குடும்பத்திற்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட கெப்ளர்90 நட்சத்திர குடும்பத்தில் 7 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் விண்வெளியில் பூமியை போன்று 7 கோள்கள் இருப்பதாக நாசா அறிவித்தது. விண்வெளியில் உள்ள கோள்களை கண்டுபிடிப்பதற்காக அனுப்பப்பட்ட கெப்ளர் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கெப்ளர் தொலைநோக்கியின் மூலம் பூமியை போன்று, ஒரு நட்சத்திரத்தை குறிப்பிட்ட சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் 7 கோள்களை கண்டுபிடித்தது.

தற்போது கெப்ளர்90 நட்சத்திர குடும்பத்தில் 8 வது கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய கோளுக்கு கெப்ளர்90ஐ என்று பெயரிட்டுள்ளனர். கெப்ளர்90ஐ நட்சத்திரத்தை சில ஒளியாண்டுகள் தொலைவில், 14 நாட்களில் சுற்றி வருகிறது. இக்கோள் கெப்ளர்90 குடும்பத்தின் மிகச்சிறிய கோளாகும். நட்சத்திரத்திற்கு மிக அருகில் சுற்றி வருவதால், கெப்ளர்90ஐ கோளின் மேற்பரப்பில் சுமார் 427 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவுகிறது. கெப்ளர்90 நட்சத்திர குடும்பம், சூரிய குடும்பத்திலிருந்து 2,545 ஒளி ஆண்டுகள் (5.8 ட்ரில்லியன் மைல்கள்) தொலைவில் உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close