[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

ஏஞ்சலினாவாக ஆசைப்பட்டு 50 பிளாஸ்டிக் சர்ஜரிகள்: இணையத்தில் வைரலாகும் பெண்

50-plastic-surges-that-are-desirous-of-angelina-viral-on-the-internet

ஈரானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், நடிகை ஏஞ்சலினா ஜோலியை போல் மாறுவதற்கு 50 பிளாஸ்டிக் சர்ஜரிகளை செய்துக் கொண்டதாக கூறியுள்ளார்.

ஈரானைச் சேர்ந்தவர் சாஹர். 19 வயதாகும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். பார்ப்பவர்களை பயமுறுத்தும் முக தோற்றத்துடன் காட்சியளிக்கும் இவர், நடிகை ஏஞ்சலினா போல் மாற ஆசைப்பட்டு 50 பிளாஸ்டிக் சர்ஜரிகளை செய்துக் கொண்டதாகக் கூறி வருகிறார். மேலும் அவர், ஏஞ்சலினாவின் தீவிர ரசிகை என்றும் அவரை போல் மாற ஆசைப்பட்டு முக அறுவை சிகிச்சைகள் மற்றும் உடல் எடை  குறைத்தல் போன்ற பல்வேறு முறைகளை கடைப்பிடித்ததாகவும், ஆனால் இறுதியில் அவருக்கு வயதான தோற்றம் போல் காட்சியளிக்கும் இந்த முகம் கிடைத்துள்ளதாகக் கூறி வருகிறார். இவர் பதிவிடும் பல்வேறு புகைப்படங்களை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்,

தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் இந்த பெண்ணின் புகைப்படங்கள் குறித்து பல்வேறு தரப்பினருக்கு சந்தேகமும் எழுந்துள்ளது. காரணம், முந்தைய புகைப்படங்களில் அழகான தோற்றத்துடன் காட்சியளிக்கும் இந்த பெண் எவ்வாறு இதுப்போல் மாற முடியும் என்றும் கேள்வி எழுந்துள்ளது .இணையத்தில் வைரலாக வேண்டும் என்று எண்ணி, இந்த பெண் மேக்கப் போட்டுக் கொண்டு கொடூரமான முகத் தோற்றத்தில் காட்சியளித்து, இதுப்போன்ற போட்டோக்களை வெளியிடுவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close