[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக நியமித்தது மத்திய அரசு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.44 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்

அமெரிக்க நடிகையை மணக்கிறார் பிரிட்டன் இளவரசர்

prince-of-britain-is-married-to-american-actress

பிரிட்டன் இளவரசர் ஹாரி அமெரிக்க நடிகையான மேகன் மார்கெல்லை அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். 

பிபிசி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அவர் தனது திருமணம் பற்றிய பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். சில வாரங்களுக்கு முன்புதான் திருமணம் செய்து கொள்வது பற்றி முடிவெடுத்ததாக பிரிட்டன் இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார்.இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியின் இரண்டாவது மகனான ஹாரி, அமெரிக்க நடிகையான மேகன் மார்கெல்லை காதலித்து திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார். இவர்களது நிச்சயதார்த்தம் இம்மாதத் தொடக்கத்தில் நடந்ததாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் திருமண நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பின்னர் மார்க்கெல், அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினராகி விடுவார். பிரிட்டன் அரசி மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோருக்கு இந்த திருமணம் மகிழ்ச்சியளிப்பதாகவும் ஹாரி மற்றும் மேகன் வாழ்நாள் முழுவதும் இன்பமாக வாழ அரசி மற்றும் இளவரசர் பிலிப் வாழ்த்துவதாகவும் பக்கிங்காம் அரண்மனை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close