[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

தேர்தலை சந்திக்க ஜெர்மனி பிரதமர் தயார்

germany-prime-minister-said-ready-for-election

ஜெர்மனியில் புதிதாக தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். 

ஜெ‌ர்மனியில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. செப்டம்பர் மாதம் நடந்த தேர்தலில் நான்காவது முறையாக பிரதமரான ஏஞ்சல் மெர்கல் இதன் காரணமாக கடுமையாக விரக்தி அடைந்துள்ளா‌ர். இதற்கிடையே ஏஞ்சலா ஆட்சி அமைக்க முடியாத சூழ்‌நிலை ஏற்பட்டிருப்பதை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய முன் வரவேண்டும் என அந்நாட்டு அதிபர் ஃபிராங் வால்டர் ஸ்டெயின்மியர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் புதிதா‌க தேர்தல் நடந்தாலும் அதை சந்திக்க தயாராக இருப்பதாக ஏஞ்சலா அதிரடியாக அறிவித்துள்ளார். அத்துடன் சிறுபான்மை அரசாக நீடிப்பதை காட்டிலும், புதிதாக தேர்தலை சந்திப்பதே உகந்தது என்றும் மெர்கல் வேதனை தெரிவித்துள்ளார். மெர்கல் கூறியபடி புதிதாக தேர்தல் நடத்தப்பட்டால் இஸ்லாம் மற்றும் அகதிகள் குடியேற்றத்துக்கு எதிராகவும் பேசி வரும் வலதுசாரி கட்சியான ஏஎஃப்டி அதிக பலன் அடையும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close