[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வு

india-s-dalveer-bhandari-re-elected-to-icj

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக. இந்தியாவின் தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

நெதர்லாந்து நாட்டில் செயல்பட்டு வரும் சர்வதேச நீதிமன்றத்துக்கு 5 நீதிபதிகள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மூன்று ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் இந்தத் தேர்தலில், ஐ.நா. பொதுசபையில் உள்ள 193 உறுப்பு நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் உள்ள 15 உறுப்பு நாடுகளும் வாக்களித்து நீதிபதிகளை தேர்வு செய்யும். இந்த ஆண்டு இந்த தேர்தல் நடந்தது. இதில் பிரேசில், லெபனான், பிரான்ஸ், சோமாலியா நாடுகளில் இருந்து தலா ஒரு நீதிபதி தேர்வு செய்யப்பட்டார். மிச்சமுள்ள ஒரு நீதிபதி இடத்துக்கு சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்கனவே நீதிபதியாக உள்ள இந்தியர் தல்வீர் பண்டாரியை  இந்தியா மீண்டும் வேட்பாளராக அறிவித்தது. இந்தப் போட்டியில் பிரிட்டனைச் சேர்ந்த கிரீன் உட்டும் இருந்தார். கடைசி நேரத்தில் கிரீன் உட் வாபஸ் பெற்றதால் தல்வீர் பண்டாரிக்கு ஐ.நா. பொது சபையில் 193 வாக்குகளில் 183 வாக்குகள் கிடைத்தது. இதையடுத்து அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பாகிஸ்தான், குல்புஷன் யாதவுக்கு மரண தண்டனை விதித்த விவகாரம் சர்வதேச நீதிமன்றத்தில் உள்ள நிலையில் இவர் மீண்டும் தேர்வாகியுள்ளார். சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்லும் முன் இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதியாக தல்வீர் பண்டாரி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close