[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்
  • BREAKING-NEWS நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனும் விவாதம் தேவையில்லாதது, மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - நடிகர் சிம்பு
  • BREAKING-NEWS சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் சென்னை விமான நிலையம் வருகை
  • BREAKING-NEWS ஏப்ரல்.4ஆம் தேதி நெடுவாசல் மக்களை சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முடிவு
  • BREAKING-NEWS இவ்வளவு நாட்களாக சத்ரியனாக பார்த்த என்னை இனி சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள்- டி. ராஜேந்தர்
  • BREAKING-NEWS அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
  • BREAKING-NEWS நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நிறைவு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் பிரதமர் மோடி சந்திப்பு

pm-modi-meet-american-president-donald-trump

இந்திய-ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிலிப்பைன்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் மோடிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து மணிலாவில் நடைபெற்று வரும் 15ஆவது ஆசியான்-இந்தியா மாநாட்டில் பங்கேற்ற மோடி, அங்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். 

இதைத்தொடர்ந்து ஆசியான் வர்த்தக மற்றும் முதலீடு மாநாட்டிலும் பிரதமர் கலந்து கொள்கிறார். அத்துடன் பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே-வுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் கிழக்காசிய மாநாட்டில் கலந்துகொள்ளும் சில தலைவர்களையும் பிரதமர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள இந்தியர்களை சந்திக்க ஆர்வமாக இருப்பதாக மோடி கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close